நரையுடன் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவதில் இன்பம்

நரையுடன் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவதில் இன்பம்

1 mins read
151e5876-5905-4770-b6db-d94b8ed904b0
இல்சங் மகளிர் நடுநிலை, உயர்நிலைப் பள்ளியில் கிட்டத்தட்ட 90% மாணவர்கள் 70, 80 வயதுகளில் உள்ளவர்கள். - படம்: மாதர் நடுநிலை, உயர்நிலைப் பள்ளி
multi-img1 of 2

சோல்: வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன் ஒரே அரட்டை, எங்கும் கலகலப்பான பேச்சு.

ஆனால், வகுப்பறைக்குள் சென்றதும் கவனம் சிதறாத குனிந்த தலைகள், கரும்பலகையில் உள்ளதை விறுவிறுவென எழுதும் கைகள்.

இது வழக்கமான ஒரு பள்ளிக்கூடம் அல்ல.

தென்கொரியாவின் நடுத்தர வயது மாதரும் முதுமை தழுவிய பாட்டிமார்களும் பயிலும் ‘இல்சங் மகளிர் நடுநிலை, உயர்நிலைப் பள்ளி’ இது.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் 70, 80 வயதுகளில் உள்ளவர்கள்.

தென்கொரியாவில் உள்ள மற்ற நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 12 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் படித்துவருகிறார்கள்.

ஆனால், தங்களின் இளமைக் காலத்தில் கல்வி கற்கவோ படிப்பை முடிக்கவோ இயலாத 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாதர்க்கு மட்டுமே இந்த ‘இல்சங்’ பள்ளி இயங்கிவருகிறது.

இவர்களுக்குப் பள்ளிக் கட்டணம் இல்லை. இத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் ஆண்டுக்கு 6,600க்கு மேற்பட்டதாகும்.

தற்போது இல்சங் பள்ளியின் ஆக மூத்த மாணவரின் வயது 87. அவருக்கு நான்கு மகள்களும் ஒன்பது வளர்ந்த பேரப்பிள்ளைகளும் உள்ளனராம்!

குறிப்புச் சொற்கள்