திருமண பந்தத்தில் இணைந்த ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்

திருமண பந்தத்தில் இணைந்த ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்

1 mins read
9884fbb5-3e67-4d04-9a17-5d9230465597
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

சிட்னி: ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், நீண்டகாலமாகத் தம்முடன் சேர்ந்து வாழும் சோஃபி அல்லுவாஷைத் திருமணம் செய்துகொண்டுள்ளாதாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வெளிப்படையாகத் தமது ஒரே பாலின உறவை அறிவித்த முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்.

“குடும்பத்தினரும் நண்பர்களும் இந்தச் சிறப்பான நாளில் எங்களுடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று அமைச்சர் வோங் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். திருமண உடையில் மலர்க்கொத்துடன் இருவரும் காணப்படும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வோங்கும் அல்லுவாஷும் சேர்ந்து வாழ்கின்றனர். சனிக்கிழமை (மார்ச் 16), தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத் தலைநகரான அடிலெய்டில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்ததாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சர் வோங், தெற்கு ஆஸ்திரேலியா மாநில நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2002ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் கட்சி செனட்டராகப் பணிபுரியும் அவர், ஆசியாவில் பிறந்து, ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் நபர் என்ற பெருமைக்குரியவர்.

ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத் திருமணங்கள் 2017ல் சட்ட அங்கீகாரம் பெற்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்