தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

1 mins read
068c38b3-51ce-4e95-8e5d-82493114bb31
உள்ளூர் நேரப்படி காலை 6 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. - படம்: பிக்சாபே

ஆப்கானிஸ்தானை இன்று (மார்ச் 19) காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 6 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.

நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகே ஏற்பட்டதால், இரு நாடுகளும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

130 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டாரங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் கட்டடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இருப்பினும், பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்