வாஷிங்டன்: அமெரிக்காவில் 2023ஆம் ஆண்டில் செய்யப்பட்ட கருக்கலைப்புகளில் 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை மாத்திரை மூலம் செய்யப்பட்டவை என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது
2022ஆம் ஆண்டில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்தது.
குறிப்பிட்ட சில மருத்துவ பிரச்சினைகள் இருந்தால் மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் அமெரிக்காவில் பல கருக்கலைப்பு மருந்தகங்கள் மூடப்பட்டன.
இதையடுத்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்ள முடிவெடுப்பவர்கள் அதற்கான இரு மாத்திரைகள் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
முதலில் மிஃப்பிரிஸ்டன் எனும் மாத்திரை உட்கொள்ளப்படுகிறது.
பிறகு மிசோபுரோஸ்டோல் மாத்திரை உட்கொள்ளப்படுகிறது
இவ்வாறு மாத்திரை மூலம் கருக்கலைப்பு செய்துகொள்வோர் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டிலிருந்து 10 விழுக்காடு அதிகரித்திருப்பதாகக் கருக்கலைப்பு உரிமை அமைப்பான கட்மேச்சர் கழகம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் இந்த மாத்திரை கிடைப்பதும் எளிதன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

