தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோன்பு துறக்க வைத்திருந்த பழச்சாற்றைப் பருகிய சக ஊழியரைக் கொன்ற ஆடவர்

1 mins read
90608d51-bd8b-4a6f-831a-1bc97c999c6f
கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட பங்ளாதேஷிய ஊழியரின் சடலத்தைக் கொண்டு சென்ற அதிகாரிகள். - படம்: தி ஸ்டார் நாளிதழ்

ஷா அலாம்: நோன்பு துறப்பதற்குத் தமக்காக வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சுப் பழச்சாற்றைச் சக ஊழியர் அருந்தியதால் அவரை ஆடவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்றார்.

இந்தச் சம்பவம் மலேசியாவின் ஷா அலாம் நகரில் உள்ள தொழிற்சாலை ஊழியர் விடுதி ஒன்றில் மார்ச் 19ஆம் தேதி இரவு சுமார் 7.20 மணிக்கு நிகழ்ந்தது.

கத்தியால் பலமுறை குத்தப்பட்ட 49 வயது பங்ளாதேஷிய ஊழியர் சம்பவ இடத்தில் மாண்டார்.

ஊழியர் தங்குமிடமாக கப்பல் கொள்கலன் ஒன்று மாற்றி அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் அந்த பங்ளாதேஷியரும் 51 வயது பாகிஸ்தான் ஆடவரும் தங்கினர்.

அந்த பாகிஸ்தானிய ஆடவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தியை அதிகாரிகள் விசாரணைக்காகக் கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட ஆடவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்