தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு; 12 பேர் மரணம்

1 mins read
d3f1cb75-1e74-4df5-9bad-ce417cf045b1
வெடிப்புச் சம்பவத்திற்குப் பின் நிலக்கரி சுரங்கத்தில் மீட்புப் பணிகள் நடந்த வேளையில் வெளியே ஊழியர்கள் கூடிக் காத்திருந்தனர். - படம்: ஏஎஃப்பி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் வட்டாரத்தில் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு ஏற்பட்டது.

அதில் 12 பேர் மாண்டதாகவும் எட்டுப் பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுரங்கத்தில் வெடிப்பு நள்ளிரவில் நடந்ததாகவும் அப்போது அங்கு 20 பேர் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

வெடிப்பின் போது மீத்தேன் வாயு வெளியேறியது, தற்போது மீட்புப் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சுரங்கங்களில் அடிக்கடி இதுபோன்ற வெடிப்புச் சம்பவங்கள் நடக்கும்.

குறிப்புச் சொற்கள்