தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐஃபோனில் செயற்கை நுண்ணறிவு வசதியைப் புகுத்த ஆப்பிள் திட்டம்

1 mins read
837066c1-7869-4009-a014-c82694d977fc
ஆப்பிள் தனது அடுத்த ஐஃபோனில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் புகுத்த பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் வெளியிடவிருக்கும் புதிய ஐஃபோனில், கூகல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு உருவாக்கமான ஜெமினி என்னும் செயலியைப் பயன்படுத்துவது குறித்து கூகல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இரு பெரிய தொழில்நுட்பங்களிடையே நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தை தொடக்கநிலையில் உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்குகள் பற்றிய நோக்கங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை என்றும் கூறப்படுவதாகத் தெரிகிறது.

ஐஃபோனில் சேர்க்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பச் செயலி பெரிய அளவிலான தரவு மற்றும் தகவல்களை தானாக உருவாக்கும் வல்லமை கொண்டதாக இருக்க வேண்டும். எனவே, ஆப்பிள் நிறுவனம் கூகல் மட்டுமல்லாது மேலும் சில செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளங்களைக் கொண்டுள்ள பெரிய நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்