உலகின் ஆக விலை உயர்ந்த மருந்து: $5.7 மில்லியன் மரபணு சிகிச்சை

உலகின் ஆக விலை உயர்ந்த மருந்து: $5.7 மில்லியன் மரபணு சிகிச்சை

1 mins read
a98105a8-003f-411d-a9be-1849792b0264
கொடிய நோயாகக் கருதப்படும் ‘எம்எல்டி’க்கு இந்த மரபணு சிகிச்சை தீர்வாக உள்ளது. - படம்: பிக்சாபே

தோக்கியோ/லண்டன்/பாஸ்டன்: மிக அரியதொரு நோய்க்கெனப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு சிகிச்சையின் விலை, 4.25 மில்லியன் அமெரிக்க டாலர் (S$5.7 மி.). இதுவே, உலகின் ஆக விலை உயர்ந்த மருந்து.

பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு ‘எம்எல்டி’ எனப்படும் ஒரு குறிப்பிட்ட நோய் வருவதற்கான அடிப்படை காரணத்தைச் சரிசெய்ய, ‘லென்மெல்டி’ எனப்படும் இந்த ஒருமுறை சிகிச்சைக்கு மார்ச் 18ஆம் தேதியன்று அமெரிக்காவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கொடிய நோயாகக் கருதப்படும் ‘எம்எல்டி’, குழந்தைகள் நடக்கும் ஆற்றலையும் பேசும் திறனையும் இழக்கக் காரணமாக இருந்துள்ளது.

உயிருடன் பிறக்கும் 100,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த ‘எல்எல்டி’ பாதிப்பு ஏற்படலாம். அமெரிக்காவில் ஆண்டுக்கு 40க்கும் குறைவான சிறார்களை இது பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அதிகப்படியான விலைகளைக் கொண்டுள்ள மரபணு மருத்துவத் துறை, பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

இருப்பினும், நோயைத் தீர்க்கும் ஆற்றல் காரணமாகவும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறைக்கு இதனால் பணம் மிச்சமாவதாகவும் சமூக அளவில் இதர பலன்கள் இருப்பதாகவும் மருந்துப் பொருள் நிறுவனங்கள் சுட்டுகின்றன.

இதற்குமுன் ஆக விலை உயர்ந்த மருந்தின் மதிப்பு $3.5 மில்லியனாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்