தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தற்காலிக அதிபரை அறிவித்த வியட்னாம்

1 mins read
d343cd53-0c97-4eb0-a6f0-948d00cab868
வியட்னாம் சட்டமன்றம் துணை அதிபர் வோ தி ஆன் சுவானை தற்காலிக அதிபராக அறிவித்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

ஹனோய்: வியட்னாம் சட்டமன்றம் துணை அதிபர் வோ தி ஆன் சுவானை தற்காலிக அதிபராக அறிவித்துள்ளது.

புதிய அதிபரை அடையாளம் காணும் வரை சுவான் அந்த பொறுப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் வோ வான் தூவோங் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து வியட்னாம் சட்டமன்றம் அவரை பதவியில் இருந்து புதன்கிழமை விலக்கியது.

சட்டமன்றத்தின் விதிமுறைகளை தூவோங் மீறிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

53 வயதான தூவோங் ஓராண்டு தான் அதிபராக இருந்தார்.

தற்போது வியட்னாமில் மாபெரும் ஊழல் ஒன்றை அந்நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதில் அந்நாட்டின் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் அடிபட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்