$220,000 விலையில் விண்வெளிப் பயணம்: சவூதி அரேபியாவின் சுற்றுலா திட்டம்

$220,000 விலையில் விண்வெளிப் பயணம்: சவூதி அரேபியாவின் சுற்றுலா திட்டம்

படம்: இணையம்

21 Mar 2024 - 9:39 pm

1 mins read

துபாய்: சவூதி அரேபியாவுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகள், விண்வெளிப் பயணத்திற்காக 2026ஆம் ஆண்டில் பதிந்துகொள்ளலாம்.

இந்த நான்கிலிருந்து ஆறு மணிநேரப் பயணத்திற்கு அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம், ஆளுக்கு 602,000 திர்ஹம் (S$220,000).

பயணத்தின்போது 360 டிகிரி பரந்துபட்ட காட்சியைக் காணும் அனுபவம் பயணிகளுக்குக் கிட்டும்.

2021ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ‘ஹேலோ ஸ்பேஸ் கம்பெனி’, இத்தகைய விண்வெளிப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்துவருகிறது.

சவூதி அரேபியாவை அது தேர்வுசெய்துள்ளதை அடுத்து ஜூன் மாதத்தில் சோதனைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இதுவே ஹேலோ நிறுவனத்தின் ஆறாவது சோதனைப் பயணம்.

ஆண்டுதோறும் 400 வர்த்தக ரீதியான பயணங்களை 2029ஆம் ஆண்டு முதல் இயக்கும் திட்டத்தில் நிறுவனம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்
துபாய்சவூதி அரேபியாகட்டணம்அனுபவம்விண்வெளி