தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியாவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

1 mins read
d05c338e-a25e-4448-b167-be5b4cd4e6d2
படம்: - தமிழ் முரசு

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்ள ஜாவா தீவுக்கு அருகே உள்ள கடற்பகுதியை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் கிழக்கு ஜாவாவின் தூபான் பகுதியின் வடக்கே 132 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு உலுக்கியதாக இந்தோனீசியாவின் நில, சுற்றுச்சூழல் அறிவியல் அமைப்பு (பிஎம்கேஜி) கூறியது.

கிழக்கு ஜாவா மாநிலத் தலைநகர் சுரபாயா, அண்டை மாநிலங்களில் உள்ள சில நகரங்கள் ஆகியவற்றில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அப்பகுதிகளில் வசிக்கும் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் எழவில்லை என்று பிஎம்கேஜி தெரிவித்தது. ஆகக் கடைசி நிலவரப்படி சேதம் ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை.

குறிப்புச் சொற்கள்