நைஜீரியாவில் குறைந்தது 21 பேரைக் கொன்ற துப்பாக்கிக்காரர்கள்

நைஜீரியாவில் குறைந்தது 21 பேரைக் கொன்ற துப்பாக்கிக்காரர்கள்

1 mins read
cb597f17-37b2-42ad-a8e4-3bd18f5db751
மக்கள் கூட்டம் அதிகமுள்ள சந்தைக்குள் புகுந்த துப்பாக்கிக்காரர்கள், அங்கிருந்தவர்களைக் குறிவைத்துச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

மைடுகுரி: நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 21 பேரைத் துப்பாக்கிக்காரர்கள் சுட்டுக்கொன்றதாக கிராமவாசிகளும் ஊர் தலைவரும் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் மக்கள் கூட்டம் அதிகமுள்ள சந்தையில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நைஜீரியாவின் கடுனா பகுதியில் இம்மாதம் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கடத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வியாழக்கிழமையன்று (மார்ச் மாதம் 21ஆம் தேதி) சந்தைக்குள் நுழைந்த துப்பாக்கிக்காரர்கள், அங்குள்ளவர்களைக் குறிவைத்துச் சரமாரியாகச் சுட்டதாக மடாக்கா கிராமத்தின் ஊர் தலைவர் அல்ஹாஜி இசா பல்வாலே தெரிவித்தார்.

“அவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. மக்களைக் கொன்றது மட்டுமல்லாது, பலரைக் கடத்திச் சென்றார்கள்,” என்றார் அவர்.

மாண்டோர், கடத்தப்பட்டோர் குறித்து அதிகாரிகள் தகவல் திரட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.

சந்தைக்கு அருகில் உள்ள கடைகள், மருந்தகம், வாகனங்களுக்குத் தாக்குதல்காரர்கள் தீவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்