பாப்புவா நியூ கினியை உலுக்கிய நிலநடுக்கம்

1 mins read
e9d7a0d5-328f-4132-86ce-2b69fbebd398
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7ஆகப் பதிவானது. - படம்: இணையம்

போர்ட் மொரேஸ்பி: பாப்புவா நியூ கினியின் வடக்குப் பகுதியில் மக்கள் தொகை அதிகம் இல்லாத பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் மாதம் 24ஆம் தேதி) நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மனியின் புவிசார் அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7ஆகப் பதிவானது.

பூமிக்கடியில் 65 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறிய அளவிலான மக்கள்தொகையைக் கொண்ட அம்புன்டி பகுதியிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் இல்லை என்று ஆஸ்திரேலிய வானிலை மையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்