கிரைமியா பகுதியில் உக்ரேன் வான்வழித் தாக்குதல்: ர‌ஷ்யா குற்றச்சாட்டு

கிரைமியா பகுதியில் உக்ரேன் வான்வழித் தாக்குதல்: ர‌ஷ்யா குற்றச்சாட்டு

1 mins read
a9773268-2118-4baf-b73b-8e7b8632fe2b
கிரைமியா தீபகற்பத்தில் போக்குவரத்து கட்டமைப்பை சேதப்படுத்தும் விதமாக உக்ரேன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியது. - படம்: ஏஎஃப்பி

மாஸ்கோ: கிரைமியாவில் உள்ள செவஸ்டோபோல் துறைமுகப் பகுதியில் உக்ரேன் வான்வழியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ர‌ஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.

10க்கும் மேற்பட்ட உக்ரேனிய ஏவுகணைகளை ர‌ஷ்யாவின் தற்காப்பு ஆயுதங்கள் ஆகாயத்திலேயே அழித்துவிட்டதாகவும் மாஸ்கோ தெரிவித்தது.

கிரைமியா தீபகற்பத்தில் போக்குவரத்து கட்டமைப்பை சேதப்படுத்தும் விதமாக உக்ரேன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியது.

தாக்குதலில் ஒரு பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் சில கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் ர‌‌ஷ்ய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த தாக்குதல் காரணமாக ர‌ஷ்ய பெருநிலையத்தையும் கிரைமியா தீபகற்பத்தையும் இணைக்கும் கடல் மற்றும் சாலைப் போக்குவரத்து சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ர‌ஷ்யாவின் இரு போர் கப்பல்கள் மீது தான் தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் ராணுவம் ஒப்புக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்
ர‌ஷ்யாஉக்ரேன்