கொசுக்களை தீவிரமாக ஒழிக்கும் பாரிஸ்

கொசுக்களை தீவிரமாக ஒழிக்கும் பாரிஸ்

1 mins read
f94b422b-f3b0-4597-8289-e6b1672ee3f2
விளையாட்டு வீரர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமங்களிலும் கொசுக்கள் இருக்கக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக உள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: பிரெஞ்சு தலைநகர் பாரிசில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. அதற்காக அந்நகரம் பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘டைகர்’ வகை கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பாரிஸ் களமிறங்கியுள்ளது.

டைகர் கொசுக்கள் டெங்கி, ஸிக்கா போன்ற காய்ச்சல்களைப் பரப்பக்கூடியவை. இதனால் பாரிசுக்கு வரும் விளையாட்டாளர்கள், ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடும். அதனால் பாரிஸ் நகரில் கொசுக்கள் இருக்கவே கூடாது என்ற நோக்கத்தில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே பூச்சிகள் தொடர்பாக பாரிசில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கனவோடு வரும் வீரர்கள் கொசுக்களால் அந்த வாய்ப்பை இழக்கக்கூடாது என்று போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

விளையாட்டு வீரர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமங்களிலும் கொசுக்கள் இருக்கக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக உள்ளனர்.

கொசுக்களை ஒழிப்பதில் பாரிஸ் நகர மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்