லாவோசில் 16 கரடிக் குட்டிகள் மீட்கப்பட்டன

லாவோசில் 16 கரடிக் குட்டிகள் மீட்கப்பட்டன

1 mins read
398d8201-7b0d-4dd0-9402-911232da2b21
மீட்கப்பட்ட கரடிக்குட்டிகளுக்கு அறநிறுவன ஊழியர்கள் பாலூட்டினர். - படம்: ஏஎஃப்பி

வியேந்தியேன்: லாவோஸ் தலைநகர் வியேந்தியேனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 16 கரடிக் குட்டிகளை விலங்குப் பராமரிப்பு அறநிறுவனம் மீட்டுள்ளது.

அந்த கரடிக் குட்டிகள் எலும்பும் தோலுமாக மிகவும் பலவீனமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவ்விடத்தில் மொத்தம் 17 கரடிக்குட்டிகள் இருந்ததாகவும் அவற்றில் ஒன்று மடிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கரடிக் குட்டிகள் அருகிவரும் விலங்கினத்தைச் சேர்ந்தவை.

இவ்வகை கரடிகளின் பித்த நீரை எடுத்து அதைப் பயன்படுத்தி விலை உயர்ந்த பாரம்பரிய மருந்து தயாரிக்கப்படுகிறது.

இதன் காரணமாகப் பல ஆசிய நாடுகளில் இவ்வகை கரடிகள் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன அல்லது பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்