பயங்கரவாத அச்சுறுத்தல்: உயர் விழிப்புநிலையில் பிரான்ஸ்

பயங்கரவாத அச்சுறுத்தல்: உயர் விழிப்புநிலையில் பிரான்ஸ்

1 mins read
f1655f5c-a282-4b3e-92a4-2ed359bb85e3
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இவ்வாண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற இருக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: பயங்கரவாதத்துக்கு எதிரான விழிப்புநிலையை பிரான்ஸ் ஆக உயர்நிலைக்கு உயர்த்தியிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் கேப்ரியல் அட்டல் மார்ச் 24ஆம் தேதி அறிவித்தார்.

பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரனுடன் பாதுகாப்பு மற்றும் தற்காப்புத்துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்துரையாடிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்துக்குள் நுழைந்து துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

அதில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்; பலர் காயம் அடைந்தனர்.

அந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இவ்வாண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற இருக்கிறது.

இதன் காரணமாகப் பயங்கரவாதத்துக்கு எதிராக பிரான்ஸ் உயர் விழிப்புநிலையில் இருக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்