ஃபுளோரிடாவில் 14 வயதுக்கு கீழுள்ளவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை

ஃபுளோரிடாவில் 14 வயதுக்கு கீழுள்ளவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை

படம்: ராய்ட்டர்ஸ்

26 Mar 2024 - 12:08 pm

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் 14 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

14 மற்றும் 15 வயது சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த விரும்பினால் தங்கள் பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும்.

இதற்கான மசோதாவில் ஃபுளோரிடா ஆளுநர் ரோன் டிசேன்ட்டிஸ் மார்ச் 25ல் கையெழுத்திட்டார்.

சமூக ஊடகத் தளங்கள் மூலம் ஏற்படும் மனநலப் பாதிப்புகளிலிருந்து சிறுவர்களை இந்தப் புதிய சட்டம் பாதுகாக்கும் என்று திரு டிசேன்ட்டிசின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காசமூக ஊடகம்