பாகிஸ்தான் கடற்படை விமானத் தளத்தில் தாக்குதல்

பாகிஸ்தான் கடற்படை விமானத் தளத்தில் தாக்குதல்

1 mins read
c09204a9-2a4a-4198-9851-ef080535e972
கடந்த ஏழு நாள்களில் மட்டும் துருபத் தளத்தில் இரண்டாவது முறையாக பலோச் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். - படம்: ஊடகம்

குவெட்டா: பாகிஸ்தான் கடற்படை விமானத் தளத்தில் அந்நாட்டு உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் மாண்டார்.

கிளர்ச்சியாளர்களைத் தடுக்கும் நோக்கத்தில் ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். அதில் ஐந்து போராளிகள் மாண்டனர் என்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல் சம்பவம் திங்கட்கிழமையன்று பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள துருபத் தளத்தில் நடந்தது.

கடந்த ஏழு நாள்களில் மட்டும் துருபத் தளத்தில் இரண்டாவது முறையாக பலோச் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் பெரிய இழப்பில் இருந்து தப்பியுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் ‌ஷெபாஸ் ‌‌ஷரிப்பின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கடற்படை விமானத் தளத்திற்குள் நுழைந்து அவர்களது கட்டுப்பாட்டுக்குள் தளத்தை கொண்டு வர முயன்றனர், ஆனால் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்களை தடுத்தனர்.

தாக்குதலுக்கு பலோச் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். பலோச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான்- சீனா இணைந்து மேற்கொள்ளும் கட்டமைப்பு வேலைகளைத் தடுக்கும் விதமாக அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் பிரச்சினை இருந்தாலும் சீனா, பலுசிஸ்தான் பகுதியில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. தற்போது தாக்குதலுக்குள்ளான கடற்படை விமானத் பொருளியல் ரீதியாக பாகிஸ்தானுக்கு வலுசேர்க்கும் இடமாகவும் பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் குவாடர் பகுதியில் பலோச் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 8 போராளிகளும் 2 ராணுவ வீரர்களும் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்