ஐந்தாண்டுகளில் மஇகா தலைமையகத்தைக் கட்டுவதே இலக்கு

மூன்றாவது முறையாக மஇகா தலைவரான விக்னேஸ்வரன்

1 mins read
9572a30f-b574-4ec5-8e8e-d5411579eb06
மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன். - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவராக மூன்றாவது தவணைக் காலத்துக்கு எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சேவையாற்றவிருக்கிறார்.

ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு கட்சியின் தலைமைப் பதவிக்கு அவருடன் போட்டியிட யாரும் முன்வராத நிலையில், கட்சித் தலைவர் பொறுப்பில் திரு விக்னேஸ்வரன் தொடர்கிறார்.

முன்னதாக கோத்தா ராஜா எம்.பி.யாகவும் செனட் தலைவராகவும் இருந்த அவர், 2018 ஜூலையில் அப்பதவிக்கு முதன்முதலாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த 5 ஆண்டுகளில் மஇகாவின் புதிய தலைமையகத்தை கட்டி முடிப்பதே தமது அடுத்த இலக்கு என்று 2024 - 2027ஆம் ஆண்டுக்கான கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு பெற்றுள்ள விக்னேஸ்வரன் கூறினார்.

இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டால் கட்சி பொருளியவ் ரீதியில் யாரையும் நம்பியிருக்க வேண்டியது இல்லை என்றார் அவர்.

தலைவர் பதவியை தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

துணைத் தலைவராக திரு சரவணன்தான் வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.  

கட்சியின் உயர்மட்ட பதவிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதுதான் கட்சியில் அடுத்த தலைமுறையை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்