காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பெரும்பாலான அமெரிக்கர்கள் எதிர்ப்பு: ஆய்வு

காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பெரும்பாலான அமெரிக்கர்கள் எதிர்ப்பு: ஆய்வு

1 mins read
835e1a23-3318-4790-b3f5-3f899fb25f0e
மார்ச் 1 முதல் 20 வரை கேலப் நிறுவனம் நடத்திய அந்த ஆய்வில், 55 விழுக்காட்டு அமெரிக்கர்கள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது கண்டறியப்பட்டது. - படம்: இபிஏ
Google News Preferred Icon

நியூயார்க்: காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மார்ச் 1 முதல் 20 வரை கேலப் நிறுவனம் நடத்திய அந்த ஆய்வில், 55 விழுக்காட்டு அமெரிக்கர்கள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது கண்டறியப்பட்டது. நான்கு மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட கருத்துகளைவிட இது 10 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம்.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு அரசியல் ரீதியாகவும் அமெரிக்கர்கள் ஏற்கும் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியினரில் பெரும்பாலானோர், இஸ்ரேலின் நடவடிக்கைகளை இன்னமும் ஏற்றாலும், அந்த விகிதம் மார்ச் மாதம் 64 விழுக்காடாகக் குறைந்தது. ஒப்புநோக்க, கடந்த ஆண்டு நவம்பரில் அது 71 விழுக்காடாக இருந்தது.

சுயேச்சை வேட்பாளர்கள் ஏற்கும் விகிதம் 47 விழுக்காட்டில் இருந்து 29 விழுக்காடாகக் குறைந்தது. ஜனநாயகக் கட்சியினர் ஏற்கும் விகிதம் 36 விழுக்காட்டில் இருந்து வெறும் 18 விழுக்காடாகச் சரிந்தது.

ஜனவரி இறுதியில் நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் அளவு கடந்து சென்றதாக அமெரிக்கர்களில் பாதிப் பேர் உணர்ந்தது கண்டறியப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
இஸ்ரேல்காஸாஅமெரிக்காஎதிர்ப்பு