இவ்வாண்டின் மிகப் பெரிய போதைப்பொருள் விநியோகம் கொலம்பியாவில் முறியடிப்பு

இவ்வாண்டின் மிகப் பெரிய போதைப்பொருள் விநியோகம் கொலம்பியாவில் முறியடிப்பு

1 mins read
b7f867b4-7cf2-4572-8116-0d65365936a5
படகிலிருந்த 113 மில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புள்ள போதைப்பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றினர். - படம்: இணையம்

கொலம்பிய வேகப் படகு ஒன்றில் ஏறக்குறைய நான்கு டன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தடுக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் விநியோகம் அது.

அந்த வேகப் படகை கொலம்பியாவின் ராணுவக் கப்பல்களும் விமானங்களும் பின்தொடர்ந்து சென்று, கொலம்பியாவிற்கு அப்பால் உள்ள கரீபியக் கடலில் பிடித்தன.

படகிலிருந்த 113 மில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புள்ள போதைப்பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொலம்பியக் கடற்படை அதன் தொடர்பில் வான்வழிக் காணொளி ஒன்றை வெளியிட்டது.

சந்தேகத்திற்குரிய படகின் பணியாளர்கள் தப்பிக்க முயன்றது, பொதிகளைத் தண்ணீரில் வீசியது போன்ற காட்சிகள் காணொளியில் பதிவாயின.

அதோடு பல மைல் தூரம் பின்தொடர்ந்த பிறகு, படகு இடைமறிக்கப்பட்டது என்றும் வேகப் படகில் இருந்த கொலம்பியாவைச் சேர்ந்த மூவரும், ஹோண்டுராசையும் வெனிசுவேலாவையும் சேர்ந்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்