பெட்டாலிங் ஜெயா: உயர் விலை மதிப்புள்ள பொருள்களுக்கான வரி (சொகுசு வரி) நடைமுறைப்படுத்தப்படுவதை மலேசியா ஒத்திவைத்துள்ளது.
இந்த வரி இவ்வாண்டு மே மாதம் 1ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சொகுசு வரி தொடர்பாக கூடுதல் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டி இருப்பதால் அது மே 1ல் அறிமுகப்படுத்தப்படாது என்று மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சொகுசு வரி நடைமுறைப்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டிருப்பதை மலேசியாவின் துணை நிதி அமைச்சர் லிம் ஹுவி யிங் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து மலேசிய வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வரி மூலம் மலேசியாவுக்குக் கிடைக்கும் வருமானத்திற்கு சொகுசு வரி சொல்லிக்கொள்ளும் அளவில் பங்களிக்காது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
அதற்குப் பதிலாக பொருள், சேவை வரி வடிவில் மேம்படுத்தப்பட்ட வரி முறையை நடைமுறைப்படுத்த அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

