தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல பில்லியன் டாலர் மோசடி: ஆடவருக்கு 25 ஆண்டுகள் சிறை

1 mins read
fb3fb988-e03e-40d5-9864-795c2d94dbfe
சேம் பேங்க்மன்-ஃபிரைட். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: பல பில்லியன் டாலர் பெறுமானமுள்ள மின்னிலக்க நாணய மோசடியில் ஈடுபட்ட சேம் பேங்க்மன்-ஃபிரைட்டிற்கு அமெரிக்க நீதிமன்றம் மார்ச் 28ல் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

தமது வாடிக்கையாளர்களிடமிருந்து பேங்க்மன்-பிரைட் 8 பில்லியன் அமெரிக்க டாலர் (S$10.8 பில்லியன்) திருடியது நிரூபிக்கப்பட்டது.

பேங்க்மன்-ஃபிரைட் நிறுவிய எஃப்டிஎக்ஸ் மின்னிலக்க நாணய பரிமாற்று நிறுவனம் தற்போது நொடித்துப்போன நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தம்மீது சுமத்தப்பட்ட மோசடி, சதித்திட்ட குற்றச்சாட்டுகளை 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று பேங்க்மன்-ஃபிரைட் ஒப்புக்கொண்டார்.

இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்று என்று அந்நாட்டு அரசாங்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்