தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்; 38 பேர் மரணம்

1 mins read
39e6201c-9907-4ae7-bf90-9fcbd37a83ad
சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ நகரில் வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. - படம்: ஏஎஃப்பி

கெய்ரோ: சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ நகரில் வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

அதில் 38 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாண்டவர்களில் 5 பேர் ஹெஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகர் மீது பின்னிரவு 1:45 மணி வாக்கில் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர், இதில் பொதுமக்களும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர் என்று சிரியாவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாக்குதலில் எத்தனை பேர் மாண்டனர், காயமடைந்தனர், எவ்வளவு பொருட்சேதம் என்பதை அமைச்சு வெளியிடவில்லை.

தாக்குதல் குறித்து இஸ்ரேல் எந்தவித கருத்துகளையும் வெளியிடவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். அதன் பிறகு காஸா, சிரியா, லெபனான் மீது தாக்குதல் நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்சிரியா