மாஸ்கோ தாக்குதல் தொடர்பில் 9 பேரைத் தடுத்துவைத்துள்ள தஜிகிஸ்தான்

மாஸ்கோ தாக்குதல் தொடர்பில் 9 பேரைத் தடுத்துவைத்துள்ள தஜிகிஸ்தான்

1 mins read
9dd17da7-e11a-4757-ac7e-9566ee7932cf
மாஸ்கோவில் மார்ச் 24ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்ட குரோக்கஸ் கலையரங்கத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவிடத்தில் வரிசையில் நின்று மலரஞ்சலி செலுத்திய மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

துஷான்பே: மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் தேசியப் பாதுகாப்புக் குழு, ரஷ்யாவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையதாக நம்பப்படும் ஒன்பது பேரைத் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் -கே அமைப்புடனும் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுவதாக தஜிகிஸ்தானின் பாதுகாப்புத் துறை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியது.

கடந்த திங்கட்கிழமை (மார்ச் 25) வக்தாத் நகரில் தடுத்து வைக்கப்பட்ட ஒன்பது பேரும், பின்னர் தலைநகர் துஷான்பேக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

மாஸ்கோவின் வடக்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள குரோக்கஸ் கலையரங்கத்தில் மார்ச் மாதம் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 143 பேர் கொல்லப்பட்டனர். ஐஎஸ் அமைப்பு அதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்