தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த வாரம் பால்டிமோர் செல்லும் அதிபர் பைடன்

1 mins read
f5d757db-d6ae-475b-b087-1fed7265c0c4
ஆற்றில் சிதறிக் கிடக்கும் இடிபாடுகளை அகற்ற பாரந்தூக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அண்மையில் அமெரிக்காவில் பால்டிமோர் துறைமுகத்தில் கப்பல் ஒன்று மோதியதில் அங்குள்ள ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது.

பாலத்தில் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் சிலர் ஆற்றில் விழுந்தனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டனர்.

இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. நால்வரை இன்னும் காணவில்லை. தேடுதல் பணியில் உள்ள அபாயங்களைக் கருத்தில் கொண்டு அவர்களைத் தேடும் பணி கைவிடப்பட்டது.

ஆற்றில் கிடக்கும் இடிபாடுகளை அகற்றம் பணி தொடங்கியுள்ள நிலையில், சம்பவ இடத்தை நேரில் காண அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கு அடுத்த வாரம் செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்