இத்தாலியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாகப் பிறப்பு விகிதம் குறைவு

ரோம்: இத்தாலியின் பிறப்பு விகிதம், சென்ற ஆண்டு வரலாறு காணாத அளவில் குறைவாகப் பதிவானது.

அந்நாட்டில் தொடர்ந்து 15 ஆண்டுகளாகப் பிறப்பு விகிதம் குறைந்துவந்துள்ளது. இத்தாலியின் மக்கள்தொகை தொடர்ந்து சுருங்கிவருகிறது.

இத்தாலியின் தேசிய புள்ளிவிவர அமைப்பான ஐஸ்டாட் இத்தகவலை வெளியிட்டது. குறைந்துகொண்டேவரும் அந்நாட்டின் பிறப்பு விகிதம் தேசிய அளவில் அவசரமாகக் கவனிக்கப்படவேண்டிய விவகாரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியில் பதவியில் இருந்துவரும் ஒவ்வொரு அரசாங்கமும் இப்பிரச்சினைக்கு ஆக அதிக முக்கியத்துவம் தரப்போவதாக உறுதியளித்துள்ளன. ஆனால், இதுவரை எந்த அரசாங்கத்தாலும் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியவில்லை.

சென்ற ஆண்டு இத்தாலியில் 379,000 குழந்தைகள் பிறந்தன. இந்த எண்ணிக்கை, 2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் 3.6 விழுக்காடு குறைவு.

2008ஆம் ஆண்டு பதிவானதுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டுக்கான எண்ணிக்கை 34.2 விழுக்காடு குறைவாகும். 2008ல்தான் இத்தாலியின் பிறப்பு விகிதம் கடைசியாகக் கூடியது.

1861ஆம் ஆண்டில் இத்தாலி ஒருங்கிணைந்த நாடாக ஆனது. அதற்குப் பிறகு சென்ற ஆண்டுதான் அந்நாட்டின் பிறப்பு விகிதம் ஆகக் குறைவாகப் பதிவானது.

2022ஆம் ஆண்டில் இத்தாலியில் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 1.4ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு 1.2ஆகக் குறைந்தது.

இத்தாலியின் மக்கள்தொகை நிலையாக இருக்க அந்த எண்ணிக்கை 2.1ஆக இருக்கவேண்டும்.

எனினும், இத்தாலியில் சென்ற ஆண்டு சுமார் 661,000 பேர் மாண்டனர். அதற்கு முன்பு மூவாண்டுகளில் இடம்பெற்ற இறப்புகளைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை குறைவு.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் அதிகமானோர் மாண்டது சென்ற ஆண்டுக்கான இறப்பு விகிதம் கூடியதற்குக் காரணம்.

மேலும் இத்தலியில் ஒருவர் சராசரியாக 83.1 வயது வரை உயிர் வாழ்வர் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ஐஸ்டாட் தெரிவித்தது. 2022ஆம் ஆண்டு பதிவானதைவிட சென்ற ஆண்டுக்கான விகிதம் ஆறு மாதங்கள் அதிகமாகும்.

மூப்படையும் சமூகத்தைக் கொண்ட இத்தாலியில் சென்ற ஆண்டு 22,500 பேர் 100 வயதைத் தாண்டினர். இந்த எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவில் அதிகமாகப் பதிவானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!