ரஷ்ய ஆலைகள் மீது தாக்குதல்: ஆறு பேர் காயம்

ரஷ்ய ஆலைகள் மீது தாக்குதல்: ஆறு பேர் காயம்

1 mins read
0b23f132-7996-46f8-b505-a0f1a2b41629
ஆலைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

மாஸ்கோ: ரஷ்யாவின் டார்டார்ஸ்டான் பகுதியில் உள்ள ஆலைகளைக் குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் ஏப்ரல் 2ஆம் தேதியன்று தெரிவித்தனர்.

இதில் ஆறு பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

யெலாபுங்கா மற்றும் நிஸ்னெகம்ஸ்க் பகுதிகளில் உள்ள ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக டார்டார்ஸ்டான் மாநில முதல்வர் ருஸ்டம் மின்னிகானோவ் தெரிவித்தார்.

இருப்பினும், ஆலைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மோசமாக இல்லை என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்