மாணவரைக் கொன்றதாக சாபாவில் 13 இளையர்கள் மீது குற்றச்சாட்டு

மாணவரைக் கொன்றதாக சாபாவில் 13 இளையர்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read
f8ad7fc9-fce7-4d2a-bfa0-030e8013f13e
கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இளையர்கள் 16 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். - படம்: பெர்னாமா

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள லஹாட் டத்து நகரில் மாணவர் ஒருவரைக் கொன்றதாக 13 இளையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 21ஆம் தேதி இரவு 9 மணிக்கும் மார்ச் மாதம் 22ஆம் தேதி காலை 7.38 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் லஹாட் டத்து தொழில் சார்ந்த பயிற்சிக் கல்லூரியில் பயின்ற 17 வயது நாஸ்மி ஐசாட் நருல் அஸ்வானை அந்த இளையர்கள் கொன்றதாகக் கூறப்படுகிறது.

கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இளையர்கள் 16 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்