தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மாணவர்கள் மூவர் காயம்

1 mins read
a1474741-4314-49e9-9bc5-932b4e69851e
தாக்குதல் நடத்தியவர் பிடிபட்டதாக பின்லாந்துக் காவல்துறையினர் தெரிவித்தனர். - படம்: இணையம்

ஹெல்சின்கி: பின்லாந்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் மூன்று மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காயம் அடைந்தோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை கூறியது.

துப்பாக்கிக்காரர் பிறகு பிடிபட்டதாக பின்லாந்து காவல்துறை தெரிவித்தது.

தலைநகர் ஹெல்சின்கியில் இருக்கும் வன்டா குடியிருப்புப் பகுதியில் உள்ள வியெர்ட்டோலா பள்ளியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை ஏறத்தாழ 800 மாணவர்கள் பயில்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்