உலகின் ஆக வயதான ஆடவர் காலமானார்

கராக்கஸ்: உலகின் ஆக வயதான ஆடவராக 2022ஆம் ஆண்டு கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ஹுவான் விசெண்ட் பெரேஸ் மோரா, ஏப்ரல் 2ஆம் தேதி காலமானார்.

வெனிசுவேலாவைச் சேர்ந்த அவருக்கு வயது 114.

திரு பெரேசின் மறைவு குறித்து வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி, திரு பெரேஸை கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகம் உலகின் ஆக வயதான ஆடவர் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அப்போது அவருக்கு வயது 112 ஆண்டுகள் 253 நாள்கள் என்று அது குறிப்பிட்டது.

அப்போதைய நிலவரப்படி, திரு பெரேசுக்கு 11 பிள்ளைகள், 41 பேரப்பிள்ளைகள், 18 கொள்ளுப் பேரப்பிள்ளைகள், 12 எள்ளுப் பேரக்குழந்தைகள் என்று கூறப்பட்டது.

விவசாயியான அவர் 1909ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி, குடும்பத்தின் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தவர். அவரது பெற்றோருக்கு மொத்தம் 10 பிள்ளைகள்.

திரு பெரேஸ் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தை, சகோதரர்களுடன் இணைந்து கரும்பு, காப்பித் தோட்டத்தில் பணியாற்றத் தொடங்கியதாகத் தெரிகிறது.

விவசாயியாக இருந்தபோதும் ஷெரிஃப் பதவியை வகித்த திரு பெரேஸ் நில, குடும்பச் சர்ச்சைகளுக்குத் தீர்வுகாணும் பொறுப்பை ஏற்றிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!