அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்ப்பு; தங்கம், வெள்ளி விலை ஏற்றம்

1 mins read
6fc48991-269c-43ab-b8fe-408dc5470daa
சிங்கப்பூரில் ஏப்ரல் 3 காலை 9.52 மணி நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,281.29 அமெரிக்க டாலர். - படம்: சாவ்பாவ்

அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகிதங்களை இவ்வாண்டு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத அளவை நெருங்குகிறது.

அதே சமயத்தில் வெள்ளியின் விலை கடந்த இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் ஏப்ரல் 3 காலை 9.52 மணி நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,281.29 அமெரிக்க டாலர்.

ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 26.34 அமெரிக்க டாலர்.

தங்கம் விலை 2024ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 11 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தங்கம் விலை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அமெரிக்கப் பொருளியல் இன்னும் வலுவாகவும் துடிப்புடனும் இருப்பதால் அமெரிக்க வட்டி விகிதம் இப்போதைக்குக் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று சிலர் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்