டோமினிக்கன் ரிபப்ளிக் எம்.பி.யின் மகன் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார்

டோமினிக்கன் ரிபப்ளிக் எம்.பி.யின் மகன் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார்

1 mins read
c96a8ee6-4a48-46f5-ac52-8554a9f8d38a
திரு லுயிஸ் அல்ஃபிரேடோ பச்சேச்சோ ரோயாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். - படம்: இணையம்

ஹியூஸ்டன்: டோமினிக்கன் ரிபப்ளிக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 1ஆம் தேதி மாலை நடைபெற்றது.

டோமினிக்கன் ரிபப்ளிக் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அல்ஃபிரேடோ பச்சேச்சோவின் மகனான 34 வயது திரு லுயிஸ் அல்ஃபிரேடோ பச்சேச்சோ ரோயாஸ், பெட்ரோல் நிலையம் ஒன்றில் உள்ள கடையிலிருந்து தமது காருக்குத் திரும்பியபோது தாக்கப்பட்டார். அப்போது அவருடன் மூன்று ஆடவர்கள் இருந்தனர்.

இரண்டு கார்களில் வந்து இறங்கிய நான்கு பேர் திரு பச்சேச்சோவைக் குறிவைத்துத் துப்பாக்கியால் சுட்டனர்.

காயம் அடைந்த திரு பச்சேச்சோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

குறிப்புச் சொற்கள்