பால்டிமோர்: இம்மாத இறுதிக்குள் பால்டிமோர் துறைமுகத்துக்குப் புதிய நீர்ப்பாதையைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் பொறியாளர் படை தெரிவித்துள்ளது.
அதன் மூலம் வர்த்தகக் கப்பல்கள் மீண்டும் அவ்வழியே செல்ல வழிவகுக்கப்படும். அண்மையில் பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் கப்பல்கள் செல்ல முடியாமல் இருக்கிறது.
மேலும், மே மாத இறுதிக்குள் பால்டிமோர் துறைமுகத்தை மீண்டும் வழக்கநிலையில் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்க ராணுவத்தின் பொறியாளர் படை குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட டாலி என்ற கப்பல் மோதியதால் மார்ச் மாதம் 26ஆம் தேதியன்று பால்டிமோர் பாலம் பட்டாப்ஸ்கோ ஆற்றுக்குள் இடிந்து விழுந்தது. ஆறு சாலைப் பணியாளர்களைப் பலிவாங்கிய அந்த விபத்தைத் தொடர்ந்து இடிபாடுகளால் கப்பல்கள் பயணம் செய்யும் பாதை முடங்கிப்போனது.
விபத்துக்குப் பிறகு அவ்வழியே மேற்கொள்ளப்பட்டுவந்த நீர்வழிப் பயணங்களில் பெரும்பாலானவை ரத்து செய்யப்பட்டிருந்தன.