தென்கொரிய அதிபர் நாடாளுமன்றத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்தார்

சோல்: அடுத்த வாரம் நடைபெறவுள்ள தென்கொரிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரு நாள்கள் முன்னதாக ஏப்ரல் 5ஆம் தேதி வாக்களிப்பு தொடங்கப்பட்டது.

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) வாக்களித்தார்.

எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டமன்றத்தில் மீண்டும் பெரும்பான்மையை பெற அவரது ஆளுங்கட்சி இம்முறை முயற்சி செய்கிறது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி நிலவரப்படி நாடு முழுவதுமுள்ள கிட்டத்தட்ட 3,500 வாக்களிப்பு நிலையங்களில் 3.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள், அல்லது தகுதியுள்ள வாக்காளர்களில் 8 விழுக்காட்டினர் வாக்களித்தனர் என்று தேசிய தேர்தல் ஆணையம் கூறியது.

கடந்த 2013ஆம் ஆண்டில் முன்கூட்டிய வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்கு எண்ணிக்கை இது.

தெற்கு துறைமுக நகரமான பூசானில் பாதுகாவலர்களுடன் வாக்களித்த திரு யூன், ஏப்ரல் 10ஆம் தேதி தேர்தலில் வாக்களிப்பது குடிமக்களின் உரிமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட என்று கூறினார்.

பலவற்றையும் பணயம் வைத்தாற்போல மக்கள் சக்தி கட்சி (பிபிபி), 300 உறுப்பினர்கள் கொண்ட சபையில் தனிப்பெரும்பான்மையை அடைய விழைந்தாலும், கருத்துக்கணிப்புகள் தெளிவாக இல்லை எனலாம். 

பொருளியல், நிதி, சுகாதாரம், பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான அவரது முக்கிய திட்டங்களுக்கும் அமெரிக்கா, ஜப்பான் உடனான முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிக்கும் தேர்தல் தோல்வி தடையாகிவிடும்.

திரு யூனும் அவரது கட்சியும் எதிர்த்த தாதியர் சட்டம் உள்பட பல சர்ச்சைக்குரிய மசோதாக்களை 167 இடங்கள் பெரும்பான்மையுடன், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி (டிபி) நிறைவேற்றியுள்ளது.

சர்வாதிகார முறையில் வழக்குத் தொடுக்கும் திரு யூனின் அரசாங்கத்திற்கு ‘தீர்ப்பு நாள்’ என்று ஜனநாயகவாதிகளும் பிற எதிர்க்கட்சிகளும் தேர்தலை வர்ணித்துள்ளன.

திரு யூன், திரு ஹான் இருவரும் முன்பு மூத்த வழக்குரைஞர்களாகப் பணியாற்றியவர்கள்.

ஏப்ரல் 4 அன்று நான்கு முக்கியக் கருத்துக் கணிப்பாளர்களால் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு ஆய்வில், 39 விழுக்காட்டினர் பிபிபிக்கும் 37 விழுக்காட்டினர் டிபிக்கும் வாக்களிக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.

ஏப்ரல் 4 அன்று இப்சோஸ் வெளியிட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில், 43 விழுக்காட்டினர் டிபிக்கும், 39 விழுக்காட்டினர் பிபிபி-க்கும் வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!