உக்ரேனிய நகரில் ர‌ஷ்யா தாக்குதல்; அறுவர் பலி

உக்ரேனிய நகரில் ர‌ஷ்யா தாக்குதல்; அறுவர் பலி

1 mins read
83909d75-0ccf-4f26-9abc-db70877a6883
ர‌ஷ்யா தாக்குதலில் உக்ரேனின் குடியிருப்பு கட்டடங்கள், கடைகள், எரிவாயு நிலையங்கள் சேதமடைந்தன. - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: உக்ரேனின் இரண்டாம் பெரிய நகரமான கார்கிவ் மீது ர‌ஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் பொதுமக்கள் அறுவர் கொல்லப்பட்டனர். 10 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின் நடந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆளில்லா வானூர்திகள் கொண்டு ர‌ஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பொதுச் சொத்துக்கள், குடியிருப்பு கட்டடங்கள், கடைகள், எரிவாயு நிலையங்கள் சேதமடைந்ததாகவும் உக்ரேன் அதிகாரிகள் கூறினர்.

ஆளில்லா வானூர்திகள் கொண்டு ர‌ஷ்யா 32 உந்துகணைகளைப் பாய்ச்சியது. அதில் 28 வானித்திலேயே அழிக்கப்பட்டன. மேலும், 6 ஏவுகணைகளை ர‌ஷ்யா உக்ரேன் மீது பாய்ச்சியது. அதில் மூன்று, உக்ரேனிய ராணுவத்தால் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
ர‌ஷ்யாஉக்ரேன்