$142,000யுடன் கடைத்தொகுதியில் விடப்பட்ட பெட்டி: ஆடவரின் வாக்குமூலம் பெற்ற காவல்துறை

$142,000யுடன் கடைத்தொகுதியில் விடப்பட்ட பெட்டி: ஆடவரின் வாக்குமூலம் பெற்ற காவல்துறை

1 mins read
39178708-bc72-4feb-a936-af5cce1c748a
பணம் உள்ள பெட்டியுடன் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் சைன் ஒமார் கான் (நடுவில்). - படம்: தி ஸ்டார்

ஷா ஆலம்: மலேசியாவில் 500,000 ரிங்கிட்டுக்கும் (142,000 வெள்ளி) அதிகமான தொகையைக் கொண்ட பெட்டியைக் கடைத்தொகையில் விட்டுச்சென்ற ஆடவரின் வாக்குமூலத்தை அந்நாட்டுக் காவல்துறையினர் பதிவுசெய்துள்ளனர்.

சனிக்கிழமையன்று (ஏப்ரல் 6) அந்த ஆடவரின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது. பெட்டாலிங் ஜெயாவில் இருக்கும் டமன்சாரா பகுதியில் உள்ள கடைத்தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் அந்த ஆடவர் பணம் உள்ள பெட்டியை விட்டுச்சென்றது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகின. அதன் மூலம் அடையாளம் தெரிவிக்கப்படாத அவரைக் காவல்துறையினர் பிடித்தனர்.

அப்பெட்டியைப் பாதுகாவல் அதிகாரி ஒருவர் முதலில் கண்டுபிடித்தார். அது தனக்குச் சொந்தம் என்று கூறி முன்வந்திருந்த வேறு நபரும் இந்த ஆடவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமார் கான் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்