தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதன்முறையாக சி-டோம் தற்காப்புக் கட்டமைப்பைப் பயன்படுத்திய இஸ்‌ரேல்

1 mins read
be086fc4-3014-41a5-8f63-dd3b5729110d
அண்மையில் காஸா முணையிலிருந்து இஸ்‌ரேல் நோக்கி பாய்ச்சப்பட்ட ஏவுகணைகளை அயர்ன் டோம் தற்காப்புக் கட்டமைப்பு எதிர்கொண்டது. அதிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள், எதிரிப் படைகள் அனுப்பிய ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தின. இதேபோன்று சி-டோம் தற்காப்புக் கட்டமைப்பு செயல்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அனுப்பிவைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் விமானம் ஒன்று இஸ்‌ரேலிய வான்வெளிக்குள் நுழைந்ததாகவும் அதை எதிர்கொண்டு அழிக்க முதன்முறையாக சி-டோம் தற்காப்புக் கட்டமைப்பைப் பயன்படுத்தியதாகவும் அந்நாட்டின் தற்காப்புப் படை ஏபர்ல் 9ஆம் தேதியன்று தெரிவித்தது.

எதிரிப் படைகள் பாய்ச்சும் ஏவுகணைகள், அனுப்பிவைக்கும் விமானங்கள் ஆகியவற்றை சுட்டு வீழ்த்தும் நோக்குடன் இந்த சி-டோம் தற்காப்புக் கட்டமைப்பு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இஸ்‌ரேலியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பிலிருந்து ஏவுகணைகள் பாய்ச்சப்படும்.

இதே போன்று இஸ்‌ரேலிய விமானப் படை பயன்படுத்தும் தற்காப்பு முறை அயர்ன்-டோம் என அழைக்கப்படுகிறது.

“இஸ்‌ரேலிய நேரப்படி ஏப்ரல் 8ஆம் தேதி மாலை சந்தேகத்துக்குரிய விமானம் இஸ்‌ரேலிய வான்வெளிக்குள் நுழைந்ததை அடுத்து, எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டது. அந்த விமானத்தை சி-டோம் தற்காப்புக் கட்டமைப்பின் ஏவுகணை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியது,” என்று இஸ்‌ரேலியத் தற்காப்பு படை அறிக்கை வெளியிட்டது.

இதில் இஸ்‌ரேலுக்குப் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்

தொடர்புடைய செய்திகள்