வட, தென்கொரிய எல்லைக்குச் செல்லும் அமெரிக்க தூதர்

1 mins read
911f0dbe-76d7-4e17-b23d-4ada1ab097ff
ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான அமெரிக்கத் தூதர் லின்டா தாமஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான அமெரிக்கத் தூதர் லின்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட் வட, தென்கொரிய நாடுகளின் எல்லைக்குச் செல்லவுள்ளார்.

வடகொரியாவுக்கு எதிரான வர்த்தகத் தடைகளில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கவனம் குறைந்துள்ள நிலையில் லின்டா தாமஸ் கொரிய நாடுகளின் எல்லைக்குச் செல்கிறார்.

மேலும் அவர் வடகொரியாவில் இருந்து தப்பித்து வெளியேறிய வடகொரிய மக்களையும் சந்திக்கவுள்ளார்.

தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான எல்லைப்பகுதி, ஆயுதங்கள் கொண்டு கடுமையாகப் பாதுகாக்கப்படும் இடமாகும்.

லின்டா தாமஸ் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தென்கொரிய சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்