புதிய உச்சங்களைத் தொடும் வெப்பம்

1 mins read
fcaa3385-98ee-47ff-b59d-0f0c24c2e8ff
உலகில் பதிவான ஆக வெப்பமிக்க மாதங்களில் கடந்த 10 மாதங்களும் உள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: உலகின் ஆக வெப்பமான மார்ச் மாதமாக 2024ஆம் ஆண்டின் மார்ச் மாதம் உருவெடுத்துள்ளது.

கடந்த 10 மாதங்களாக உலக அளவில் வெப்பநிலை அதிகரித்து புதிய உச்சங்களைத் தொட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு நிலையம் ஏப்ரல் 9ஆம் தேதி தகவல் வெளியிட்டுள்ளது.

உலகில் பதிவான ஆக வெப்பமிக்க மாதங்களில் கடந்த 10 மாதங்களும் உள்ளன.

1850 ண்டுக்கும் - 1900க்கும் இடைப்பட்ட காலத்தின் வெப்பநிலையுடன் ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் மார்ச் 2024ஆம் ஆண்டு வரை பதிவான உலகின் சராசரி வெப்பம் ஒப்பிடப்பட்டது. அப்போது உலகின் சராசரி வெப்பம் 1.58 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

உலகின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று ஆராய்ச்சியாளர்கள் அக்கறைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்