கோலாலம்பூர்: மலேசியாவில் சமூக ஊடகங்களில் தீங்கு விளைவிக்கும் தகவல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அந்நாட்டு தகவல் அமைப்பு காவல்துறையுடன் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் இருந்த தீங்கு விளைவிக்கும் தகவல்கள் எண்ணிக்கை 42,904. ஆனால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் அந்த எண்ணிக்கை 51,63ஆக உயர்ந்துள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டது.
மலேசிய அதிகாரிகளுடன் இணைந்து மெட்ட நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் ஆகியவை செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சமூக ஊடகங்களில் இடம்பெறும் தகவல்களை நிறுவனங்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பாக இனம், மதம், மன்னர் குறித்த தகவல்களை எப்போதும் கண்காணிக்க வேண்டும் என்றும் மலேசிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
திங்கட்கிழமையன்று மலேசிய அதிகாரிகள் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக் ஆகியவற்றின் நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தீங்கு விளைவிக்கும் தகவல்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளையும் நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதுபோன்ற தகவல்களை கையாள்வதற்கான குறிப்புகள், திட்டங்கள் ஆகியவற்றையும் நிறுவனங்கள் வெளியிட வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.
மோசடி, இணையத்தில் நடக்கும் சூதாட்டம் போன்றவற்றைத் தடுக்கவும் அதற்கு எதிரான நடவடிக்கைளை வேகமாக எடுக்கவும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக் ஆகியவைத் தயாராக இருக்க வேண்டும் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
சமூக ஊடகங்களில் 13 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும், மேலும் 13 வயதுகுக் உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்வதைத் தடுக்கவும் திட்டங்கள் தீட்டப்படுவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.