தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சந்தேக நபரை நோக்கி காவல்துறையினர் ஏறத்தாழ 100 முறை சுட்டனர்’

1 mins read
a5efe2bb-0487-49ee-9ab7-9dd9d973abb9
தங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஆடவரைக் காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

சிக்காகோ: அமெரிக்காவின் சிக்காகோ நகரில் போக்குவரத்து விளக்கிற்கு அருகில் ஆடவர் ஒருவர் நான்கு காவல்துறை அதிகாரிகளைக் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார்.

இதையடுத்து, அந்த அதிகாரிகள் சந்தேக நபரைக் குறிவைத்து ஒரு நிமிடத்துக்குள் கிட்டத்தட்ட 100 முறை துப்பாக்கியால் சுட்டதாக அந்நகரின் பொதுமக்கள் நலன் கண்காணிப்பு அலுவலகம் ஏப்ரல் 9ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.

காவல்துறை அதிகாரியால் சுடப்பட்ட 26 வயது திரு டெக்ஸ்டர் ரீட் ஜூனியர் மருத்துவமனையில் மாண்டார்.

அவரது காரிலிருந்து துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரி ஒருவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது

மார்ச் மாதம் 21ம் தேதியன்று நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்