புதுடெல்லி: உலகின் நிலக்கரி பயன்பாடு 2023ஆம் ஆண்டில் இரண்டு விழுக்காடு உயர்ந்துள்ளது. 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு அதற்கான தேவை அதிகரித்துள்ளது.
சீனாவில் புதிதாகக் கட்டப்படும் கட்டடங்கள், மற்ற நாடுகளில் சரிவர திட்டங்களைப் பின்பற்றாதது போன்றவை நிலக்கரி சக்தி பயன்பாட்டை அதிகாமாக்கியதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் பயன்படுத்தப்பட்டாலும் உலக அளவில் கிட்டத்தட்ட 70 ஜிகாவாட்ஸ் எரிசக்தி நிலக்கரி மூலம் பயன்படுத்தப்பட்டன. அதில் 47.4 ஜிகாவாட்ஸ் நிலக்கரி எரிசக்தியை சீனா பயன்படுத்தியாகக் கூறப்படுகிறது.
சீனாவுக்கு வெளியேவும் நிலக்கரி எரிசக்தியின் பயன்பாடு 2019ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகரித்துள்ளது.
நிலக்கரியில் இருந்து வரும் எரிசக்தியைப் பயன்படுத்துவதை குறைக்க 2015ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அதில் 25 நாடுகள் நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டைக் குறைத்தன. ஆனால் 35 நாடுகள் நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டை அதிகமாக்கின.
நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டைக் குறைப்பதில் உலக நாடுகள் சரியான திசையில் செல்கின்றன. ஆனால் அதை அவர்கள் வேகமாக செய்வதில்லை என்று ஆய்வு குறைகூறியுள்ளது.
உலக சராசரி வெப்பம் அதிகரிப்பதை 1.5 டிகிரி செல்சியசுக்கு கீழ் வைத்திருக்க வேண்டுமானால் 2040ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சீனா இந்த திட்டங்களுக்கு சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என்று கவனிப்பாளர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.