தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெருவில் டெங்கி இறப்பு மூன்று மடங்காக அதிகரிப்பு

1 mins read
285349a1-0838-40f5-8368-85ab198e93f6
தலைநகர் லிமா முழுவதும் உள்ள வசதி குறைந்தோர் வசிக்கும் பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் அண்மைய நாட்களில் கொசு மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். படத்தில் மார்ச் 7ஆம் தேதி ஒரு வீட்டில் கொசு மருந்தடிக்கும் சுகாதாரப் பணியாளர். - படம்: ராய்ட்டர்ஸ்

லிமா: பெருவில் டெங்கியால் ஏற்படும் இறப்புகள் இந்த ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவித்துள்ளன.

வறுமையான பகுதிகளைக் கடுமையாகப் பாதித்துள்ள இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் இரட்டிப்பாக்கியுள்ளது.

அதிபர் டினா போலுவார்ட்டின் அரசாங்கம் ஒரு “அவசர ஆணையை” அங்கீகரித்ததாகக் கூறியது,

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அசாதாரண பொருளியல் நடவடிக்கைகளை அனுமதிக்கும் அவசர ஆணையை அதிபர் டினா போலுவார்ட்டின் அரசாங்கம் இவ்வாரம் அதிகரித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தால் டெங்கிப் பரவல் மோசமடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வியாழக்கிழமை நிலவரப்படி, 2023ன் இதே காலகட்டத்தின் 33 இறப்புகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இதுவரை டெங்கியால் 117 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கித் தொற்று சந்தேகத்திற்குரிய சம்பவங்களின் எண்ணிக்கை 135,000ஐ எட்டியுள்ளது என்று பெருவின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பெருவின் புள்ளிவிவரங்கள் ஆபத்தானவை என்று கூறிய நிபுணர்கள், டெங்கி இதுவரை கண்டறியப்படாத பகுதிகளுக்கு ஏடிஸ் கொசுக்கள் பரவுவதை இது காட்டுவதாகக் குறிப்பிட்டனர்.

லிமா உட்பட நாட்டின் கடலோரப் பகுதிகள், வடக்குப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான டெங்கி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்