சிங்கப்பூர்-வியட்னாம் இடையே கடல்வழி கம்பிவடத் தொடர்பு: ஒப்பந்தம் கையெழுத்து

சிங்டெல்லும் வியட்னாமின் ஆகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வியட்டெல்லும் கடலுக்கடியில் கம்பிவட இணைப்பை ஏற்படுத்த உடன்பாடு செய்துள்ளன.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அவை இரண்டும் கையெழுத்திட்டு உள்ளன.

சிங்கப்பூரையும் வியட்னாமையும் நேரடியாக இணைக்கும் அந்தக் கம்பிவடத் தொடர்பை 2027ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நடப்புக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டு உள்ளது.

அந்தத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆகக் குறைந்த தூர நேரடிக் கம்பிவடத் தொடர்பாக அது இருக்கும் என்று இரு நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) தெரிவித்தன.

வியட்னாம்-சிங்கப்பூர் கம்பிவட முறை (விடிஎஸ்) என்று அழைக்கப்படும் அந்தத் தொடர்பு நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.

கடல்வழி கம்பிவடத் தொடர்புக்காக வியட்நாமின் நிலப்பகுதியில் உருவாக்கப்படும் முக்கிய இணைப்பு நிலையத்தை வியட்டெல் நிர்வகிக்கும்.

சிங்கப்பூரில் நிறுவப்படும் அதேபோன்ற நிலையத்தை சிங்டெல் கவனித்துக்கொள்ளும்.

அந்தத் தொழில்நுட்பத்துக்கு உதவியாக துணை நிலையங்கள் கம்போடியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவில் ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடிஎஸ் கம்பிவடத் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட பின்னர் வியட்டெல்லின் ஒட்டுமொத்த அனைத்துலகத் தொலைத்தொடர்புத் திறனில் வினாடிக்கு பலநூறு டெராபைட்ஸ் (டிபிபிஎஸ்) இணையும்.

2030ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 334 டிபிபிஎஸ் திறனை உருவாக்கும் முயற்சியில் வியட்னாம் ஈடுபட்டு உள்ளது.

அத்துடன் 2030ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 15 கம்பிவடத் தொடர்புகளை ஏற்படுத்தும் வியட்னாமின் உத்திக்கு ஏற்ப சிங்டெல்லுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய கம்பிவடத் தொடர்பு சிங்கப்பூர், வியட்னாமின் ஆகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே நவீன அலைவரிசைத் தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் கம்பிவடம் என்று கருதப்படுகிறது.

“தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தைப் பொறுத்த அளவில், உலகின் மிக விரைவான மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சி கண்டு வரும் நாடு வியட்னாம்.

“செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிறுவனங்களும் பயனீட்டாளர்களும் கடைப்பிடிக்கும் போக்கு அங்கு நிலவுகிறது,” என்று சிங்டெல்லின் மின்னிலக்கக் கட்டமைப்பு மற்றும் சேவைகள் பிரிவுக்கான துணைத் தலைவர் ஊய் செங் கியட் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!