ஆண்டுக்கு 10 நாள் ‘சோக விடுப்பு’: சீன பேரங்காடியின் வினோத அறிவிப்பு

பெய்ஜிங்: சீனாவில் உள்ள பேரங்காடிக் குழுமம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ‘சோக விடுப்பு’ என்னும் வினோத விடுப்பு அளிக்க இருப்பதாக அறிவித்து உள்ளது. வேலைக்கு வர இயலாதபோதும் வேளைப்பளு அதிகமாக இருக்கும்போதும் அந்த விடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆண்டுக்கு பத்து நாள் அனுமதிக்கப்படும் அந்த விடுப்பு வேண்டி அளிக்கப்படும் விண்ணப்பத்தை மேலாளர்கள் ரத்து செய்யமுடியாது என்று ஃபாட் டோங் லாய் பேரங்காடிக் குழுமத்தின் தலைவர் யு டோங் லாய் தெரிவித்து உள்ளார்.

‘சோக விடுப்பு’ அறிவிப்பை அவர் சென்ற மார்ச் மாதம் 26ஆம் தேதி வெளியிட்டு இருந்தார்.

“சிரமப்படும் நாள்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்பது மனித இயல்பு,” என்று அந்த விடுப்புக்கான காரணத்தை அப்போது அவர் விளக்கினார்.

திரு யு தனது முதல் பேரங்காடியை ஹெனான் மாநிலத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு திறந்தார். தற்போது அந்த மாநிலத்தில் 12 கிளைகளைத் திறந்துள்ளது அந்தப் பேரங்காடி.

“சோக விடுப்பு என்று பெயர் வைக்கப்பட்டாலும் அந்த விடுப்பால் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியே கிடைக்கும். நிறுவனத்தை ஊழியர்கள் புரிந்துகொண்டு ஆதரவளிக்கவும் வேலை-வாழ்க்கை சமநிலையை உணர்த்தவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

“எப்போது தங்களுக்கு சோக விடுப்பு வேண்டும் என்று ஊழியர்கள் சுதந்திரமாக முடிவெடுத்துக்கொள்ளலாம்,” என்று திரு யு தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!