இஸ்‌ரேலுக்கு பதிலடி கொடுப்பதில் ஈரான் அவசரப்படாது: ஆதாரங்கள்

துபாய்/வாஷிங்டன்: மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றநிலை அதிகரித்துவரும் வேளையில், ஈரான் தூதகரம் மீதான தாக்குதலுக்கு இஸ்‌ரேலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் கோடிகாட்டியுள்ளது.

சிரியாவில் ஈரானின் துணைத் தூதரகம் மீது ஏப்ரல் 1ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இஸ்ரேலுக்குத் தகுந்த பாடம் புகட்டப்படும் என்றும் ஆனால் ஈரான் அவசரமாகச் செயல்படாது என்றும் ஈரான் வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்தத் தாக்குதலில் ஈரானின் மூத்த தளபதி உட்பட ஏழு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஏப்ரல் 7 ஆம் தேதி ஓமானுக்குப் பயணம் மேற்கொண்டபோது வாஷிங்டனுக்கு ஈரான் இச்செய்தியை அனுப்பியது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே, இடைத்தரகராக ஓமான் அடிக்கடி செயல்படுவதாகத் தகவல்கள் கூறின.

ஈரானிடமிருந்து தகவல் வந்தது குறித்து கருத்துத் தெரிவிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார். ஆனால் தூதரகம் மீதான தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்று ஈரானிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

ஈரானின் பதிலடி கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை பற்றி அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. ஓமான் வழியாக அனுப்பப்பட்ட செய்தி பற்றி அது அறிந்திருக்கவில்லை என்றாலும், போரை விரிவாக்கும் வகையில் ஈரானின் தாக்குதல் இருக்காது. இஸ்ரேல் மீது பல தாக்குதல்களை நடத்த வட்டாரப் பிரதிநிதிகளை அது பயன்படுத்தலாம் என்றும் அது தெரிவித்தது.

ஈரானியத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, “இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டும், அது தண்டிக்கப்படும்,” என்று ஏப்ரல் 10ஆம் தேதி கூறினார். இது ஈரானிய மண்ணின் மீதான தாக்குதலுக்குச் சமம் என்றார் அவர். எனினும் அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இஸ்ரேல்தான் என்று அமெரிக்கா கூறியது.

ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் தாக்குதலைக் கண்டித்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தியிருந்தால் “இந்த முரட்டு ஆட்சியைத் தண்டிக்க வேண்டியது ஈரானின் கட்டாயம்” தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் குழு ஏப்ரல் 11ஆம் தேதி கூறியது.

இஸ்ரேல் மீது ஈரானில் “கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலில்” அமெரிக்கா ஈடுபடாது என்ற உத்தரவாதத்தையும் ஈரான் கோரியது. ஓமான் வழியாக வழங்கப்பட்ட பதிலில் அமெரிக்கா அக்கோரிக்கையை நிராகரித்ததாக ஆதாரங்கள் தெரிவித்தன.

ஈரானின் கூட்டாளிகளாகக் கருதப்படும் ஹிஸ்புல்லா அல்லது ஹவுதிகள் இந்த தாக்குதலை முன்னெடுக்கலாம் என்றே அமெரிக்கா கணித்துள்ளது.

இன்னும் சில தினங்களில் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்படுவது உறுதி என்றே அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆனால், இந்த தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக வெடிக்கும் ஆபத்து இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

மற்ற பகுதிகளில் ஏற்படும் சூழல்களையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோதலை தவிர்க்கும்படி பிற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஈரானும் இஸ்ரேலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என ரஷ்யா, ஜெர்மன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டால், மேற்கத்திய நாடுகளும் களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் குண்டுவீசித் தாக்கப்பட்டதில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளும் அமெரிக்காவும் மிகுந்த எச்சரிக்கை நிலையில் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!