ர‌ஷ்யப் பிடியில் உள்ள நகர் மீது உக்ரேன் தாக்குதல்; 16 பேர் மரணம்

ர‌ஷ்யப் பிடியில் உள்ள நகர் மீது உக்ரேன் தாக்குதல்; 16 பேர் மரணம்

1 mins read
64d18140-edc3-4017-8b4a-5c9dd4a1cf4e
படம்: - தமிழ் முரசு

கியவ்: டொக்மாக் நகர் மீது உக்ரேனிய ராணுவம் நடத்திய தாக்குதலில் மாண்டோரின் எண்ணிக்கை 16க்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள ஸப்போரி‌ஷ்சியா வட்டாரத்தில் ர‌ஷ்யா நியமித்த அதிகாரி ஒருவர் இத்தகவலை வெளியிட்டார்.

அவ்வட்டாரத்தில் ஆக உயரிய பதவியில் இருக்கும் ர‌ஷ்ய அதிகாரியான யெவ்கெனி பலிட்ஸ்கி, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நடந்த தாக்குதலில் 20 பேர் காயமடைந்ததாக டெலிகிராம் செயலிவழி தெரிவித்தார். அவர்களில் 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் குறித்து உக்ரேன் எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.

ஸப்போரி‌ஷ்சியா, ர‌ஷ்யப் படைகள் பாதி ஆக்கிரமித்திருக்கும் நான்கு உக்ரேனிய வட்டாரங்களில் ஒன்றாகும். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது முழுவீச்சில் படையெடுத்ததைத் தொடர்ந்து ர‌ஷ்யா, அவ்வட்டாரத்தைத் தன்வசம் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டது.

குறிப்புச் சொற்கள்