ரஷ்யா, மின்வாகனப் பிரச்சினைகளுக்கு இடையே சீனாவில் ஷோல்ஸ்

ரஷ்யா, மின்வாகனப் பிரச்சினைகளுக்கு இடையே சீனாவில் ஷோல்ஸ்

1 mins read
99a1dab6-64e2-40a3-8dd2-96fe78a39afe
சீனாவின் சொங்சிங் நகரில் உள்ள போஷ் ஹைட்ரோஜன் கருவிகளைத் தயாரிக்கும் ஆலையில் ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

சொங்சிங்: சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள், ரஷ்யாவுக்கு அந்நாடு வழங்கிவரும் ஆதரவு போன்ற பிரச்சினைகளுக்கு நடுவே ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.

ஜெர்மனியின் முதன்மை வர்த்தகப் பங்காளி நாடான சீனாவுடன் அந்நாட்டு வர்த்தக நடவடிக்கைகள், ரஷ்யாவுக்கு சீனா அளித்துவரும் ஆதரவு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உறவுநிலையை சீர்ப்படுத்தும் முயற்சியாக அவரது சீனப் பயணம் பார்க்கப்படுகிறது.

சீனாவுக்கு ஜெர்மானியப் பிரதமர் ஷோல்ஸ் மேற்கொண்டுள்ள பயணம் அவர் இதுவரை மேற்கொண்டுள்ளவற்றில் ஆக அதிக நாள்களைக் கொண்டது என்று கூறப்படுகிறது. எனினும், இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை குறைக்கும் விதமாக இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் அமைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.

மேலும், சீனாவின் வாகனத் தயாரிப்புக்கு அந்நாடு வழங்கும் மானியம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விசாரித்து வரும் வேளையில் அதற்கு ஜெர்மனி எந்த அளவுக்கு ஆதரவு வழங்கும் என்பதும் கேள்விக்குறியாக இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

ஜெர்மனியின் பல நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் திரு ஷோல்ஸ் தனது சீனப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவரது குழு முதன் முதலாக சீனாவின் தென்மேற்கு நகரான சொங்சிங்கிற்குச் சென்றுள்ளது. அங்கிருந்து அவர் ஷாங்காய், பெய்ஜிங் ஆகிய நகரங்களுக்கும் தமது பயணத்தைத் தொடர்வார் என்றும் பெய்ஜிங்கில் சீனப் பிரதமர் லி சியாங்கைs சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்